சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் 3ல் பலகட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இராயப்பேட்டை நிலையத்திலிருந்து ஆர்.கே. சாலை நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் பாலம் மற்றும் இராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரியக் கட்டிடம் ஆகியவற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘பவானி’ ஈடுபடுத்தப்பட்டது. 910 மீட்டர் […]
