துபாய்,
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரு இடம் முன்னேறி மறுபடியும் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் பும்ரா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 14-வது இடத்தை பிடித்துள்ளார்.