இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி,
ஆரஞ்சு அலர்ட்
இன்று திருநெல்வேலி, தேனி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.

மஞ்சள் அலர்ட்
சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
நாளை
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 15, 2025