சென்னை: பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின் உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்றைய கூட்டத்தொடருக்கு கிட்னி ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர். அதுபோல, வந்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்தனர். இதையடுத்து பேரவை அமர்வு வழக்கமான நடைமுறைப்படி திருக்குறள் வாசித்து தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. இதில் […]
