அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. எனவே சார்லசுக்கு 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவரது தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உத்தரவிட்டது. எனவே சார்லசுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.