ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: ஆம்னி பேருந்து கட்​ட​ணத்தை காலம் கடந்து குறைப்பதால் என்ன பயன் என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலை தளப் பக்கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தீபாவளியை முன்​னிட்டு தலைநகரிலிருந்து தென்​மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் ஆம்னி பேருந்​துகளின் கட்​ட​ணம் நான்கு மடங்​காக உள்​ளதை எதிர்த்து மக்​கள் குரல் எழுப்​பிய​வுடன், காலங்​கடந்து கட்​ட​ணத்​தைக் குறைத்​துள்​ளது திமுக அரசு.

இதனால் யாருக்கு என்ன பயன்? போதிய அரசுப் பேருந்​துகள் இல்​லாத​தால், கூடு​தல் கட்​ட​ணம் என்று அறிந்​தும், வேறு வழி​யின்றி ஒரு மாதத்​துக்கு முன்பே ஆம்னி பேருந்​தில் டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருந்த பல்​லா​யிரக்​கணக்​கான பயணி​களுக்​குத் தற்​போது இழப்​பீடு வழங்க முடி​யு​மா? ஒவ்​வொரு பண்​டிகை​யின்​போதும் ஆம்னி பேருந்து கட்​ட​ணக் கொள்ளை நடை​பெறும் நிலை​யில், ஒரு​முறை​கூட முன்​னரே திட்​ட​மிட்​டுத் தானாக முன்​வந்து கட்​ட​ணத்தை நெறிப்​படுத்​தாதது திமுக அரசின் நிர்​வாகத் திறனின்​மை​யையே காட்​டு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.