இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா கிளம்பி சென்றுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோத உள்ளன. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், இரு அணி வீரர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
Add Zee News as a Preferred Source
இதில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் இந்திய வீரர் அக்சர் படேல் பேட்டி அளித்தனர். அப்போது டிராவிஸ் ஹெட் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரை கண்டல் செய்துதான் தற்போது வைரலாகி வருகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர், கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து கேட்டார். அதற்கு பதில் அளித்த டிராவிஸ் ஹெட், அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். இந்திய அணிக்காக அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளனர். என்னை விட அக்சர் பட்டேல் அவர்களை பற்றி அதிகமாக பேச முடியும். விராட் சிறந்த வெள்ளை பந்து வீரர். ரோஹித் அவ்வளவு பின்தங்கியிருக்கவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் தவறவிடப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் அவர்கள் இருவரும் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன் (அக்சர் படேலைப் பார்த்து சிரித்தார்). அவர்கள் இருவரும் உலகக் கோப்பைக்கு முன்னேற முயற்சிக்கிறார்கள். அவர்கள் இன்னும் விளையாடுவது ஆட்டத்திற்கு மிகவும் நல்லது,” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய அக்சர் படேல், அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், அவர்கள் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தொழில்முறை வீரர்கள், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவர்கள் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய ஃபார்மைப் பற்றிப் பேசினால், அவர்கள் நன்றாகத் தயாராகி வருகிறார்கள். எனவே அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
இத்தொடரின் மூலம் சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிமுகமாகிறார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு இவரை நியமித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான அணி
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
About the Author
R Balaji