அமெரிக்கா: நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் – 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கிளார்க் நெடுஞ்சாலை அருகே விமானம் விழுந்த நொறுங்கியது.

இதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததால் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் விமானம் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.