ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 20 போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.