சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும்.

இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?

யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?

யாருக்குப் பணம் தரவேண்டும்?

இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEகள் இருக்கிறார்கள்.

இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?

யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?

யாருக்குப் பணம் தரவேண்டும்?

இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEௐௐகள் இருக்கிறார்கள்.

நிதி நிர்வாகம்…

இது மாதிரியான ஒரு நிலையில், அவர்களுக்கு அதிகமான குழப்பம் ஏற்படுவது, நிதி தொடர்பான விஷயங்களில்தான். உற்பத்தி, மனிதவளம், மார்க்கெட்டிங் என ஒவ்வொரு துறையிலும் தனித்தனி நபர்களை நியமித்து, பிசினஸை நன்கு வளர்த்தெடுக்கும் தொழில்முனைவோர்கள், ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் என்று வரும்போது கொஞ்சம் குழம்பித்தான் போகிறார்கள்.

கடனுக்கான வட்டியை முதலில் செலுத்துவதா அல்லது பொருள்களை வாங்குவதா, கம்பெனி மூலம் வந்த லாபத்தை கார் வாங்க பயன்படுத்தலாமா எனப் பல விஷயங்கள் வரும்போது கொஞ்சம் தடுமாறி ஏதோ ஒரு முடிவை எடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் பிசினஸ் பாதிப்படைந்து, கடைசியில் அவர்களே கஷ்டப்படும் நிலை உருவாகிவிடுகிறது.

LS Kannan

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? நிதி நிர்வாகம் தொடர்பான விஷயத்தில் MSME பிசினஸ்மேன்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல்  ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது. தொழில் ஆலோசகரும் புத்தக ஆசிரியரும் Csense Management Solutions Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநருமான எல்.எஸ்.கண்ணன் இதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://forms.gle/RcyiSmTp8tswebv66 என்கிற இந்த லிங்கினை சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம். தொழில் முனைவோர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்பதால், தொழில் துறை சம்பந்தப்படாதவர்கள் இதில் தங்கள் பெயரைப் பதிவு செய்யாமல் இருப்பது நல்லது.

சிறுதொழில்முனைவோர்கள் நிதி நிர்வாகம் தொடர்பாக தெளிவான அறிவைப் பெற்றால், அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சிறப்பாக செய்யலாம். இதற்கு அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.