அகமதாபாத்: குஜராத் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தவிர, ஏனைய 16 அமைச்சர்களும் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
குஜராத் அமைச்சரவையில் மொத்தம் 17 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். குஜராத் சட்டப்பேரவை மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்டது.
எனவே, அதிகபட்சம் 27 அமைச்சர்கள் வரை பதவி வகிக்கலாம் என்பது விதி. இது, அந்த அவையின் மொத்த பலத்தில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.