டிவிஎஸ் மோட்டார் 125சிசி சந்தையில் ரைடர் 125, ஸ்கூட்டர் பிரிவில் பூட்ஸ்பேஸ் கொண்ட ஜூபிடர், 150சிசியில் புதிய ஸ்போர்ட்டிவ் என்டார்க் 150 என பல மாறுபட்ட தனித்துவமான அடையாளங்களை கொண்டு வந்த நிலையில் இந்நிறுவனத்தின், அடுத்த முயற்சி ப்யூர் ஆஃப் ரோடர் அல்ல ஆனால் அட்வென்ச்சர் டூரிங் அனுபவத்தை வழங்க அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் வெளியாகியுள்ளது.
அப்பாச்சி RTX போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் சில வருடங்களாக அட்வென்ச்சர் ரக மாடல்களுக்கு ஹீரோ இம்பல்ஸ் துவங்கி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ், கவாஸாகி KLX, கேடிஎம் 390 அட்வென்ச்சர், யெஸ்டி அட்வென்ச்சர் ஆகியவற்றுடன் டூரிங் பயணத்துக்கான சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் போன்றவை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் அமைந்துள்ளது.
லேசான ஆஃப் ரோடுக்கு ஏற்ற அப்பாச்சி ஆர்டிஎக்ஸிற்கு சவாலினை என்ஜின் cc அடிப்படையில் நேரடியான மாடல்கள் இல்லையன்றாலும் விலையின் அடிப்படையில் சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் 250, கேடிஎம் 250 அட்வென்ச்சர் போன்றவற்றுடன் மற்ற மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Apache RTX சிறப்புகள்
300cc பிரிவில் வந்துள்ள அட்வென்ச்சர் டூரிங் பயணத்துக்கு நீண்ட தொலைவுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பினை கொண்டிருந்தாலும் இருக்கை உயரம் 835 மிமீ ஆனது சற்று குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ளுவார்கள், ஆனால் பைக்கினை கையாளுவது எளிமையாக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்குவது கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாகும்.
என்ஜினை டிவிஎஸ் புதிதாக உருவாக்கியுள்ள நிலையில், ஆர்டிஎக்ஸ்-டி4 ஆனது மிக நீண்ட ஹைவே பயணங்களில் என்ஜினின் வெப்பத்தை இலகுவாக கையாளுவதற்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பினை பெற்று மாடரன் டிரென்டான ரைட் பை வயருடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடுகளுக்கு ஏற்ப திராட்டிள் ரெஸ்பான்ஸை வெளிப்படுத்துவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்றவை செயல்படுவது கூடுதலாக இந்த அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் பைக்கின் மீதான ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றது. பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ள நிலையில் மைலேஜ் பற்றி பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை.
அதிக சிரத்தை இல்லாத ஆஃப் ரோடுகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷனாக 180 மிமீ இரு புறத்திலும் பயணிப்பதுடன் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் கொடுக்கப்பட்டு, சுவிட்சபிள் ஏபிஎஸ் உடன் சிறப்பான ஆஃப் ரோடு டயர்களும் உள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொடுத்திருப்பதுடன் பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட பலவற்றை பெற்றுள்ளது.
பேஸ் வேரியண்டில் அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், டாப் வேரியண்டில் கூடுதலாக சிரத்தை இல்லாத கியர் ஷி்ப்ட் செய்ய பை டைரக்ஷனல் வசதி, டாப் பேனியர் வைப்பதற்கான ஆப்ஷனல் ஆக்செரீஸ் உள்ளது. மற்றபடி BTO வேரியண்டில் தேவைக்கு ஏற்ப அட்ஜெட் செய்யும் சஸ்பென்ஷன், TPMS உள்ளது.
இது ரொம்ப சாகசங்களுக்கான ஆஃப் ரோடு பைக் அல்ல ஆனால் லேசான அட்வென்ச்சருக்கும் நீண்ட தொலைவுக்கான டூரிங்கிற்கும் ஏற்றதாக விளங்கும் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் விலை ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.34 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் போட்டியாளர்களில் சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் நேரடி சவாலினை விடுக்கின்றது.