இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வரும் வருகிறது. இத்தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்று உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில், நேற்று (அக்டோபர் 19) முதல் போட்டி நடைபெற்றது.
Add Zee News as a Preferred Source
இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இடையிடையே மழை குறிக்கிட்டதால்,ம் போட்டி 26 ஓவர்களாக நடைப்பெற்றது. போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறிய இந்திய அணி இறுதியில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 38, அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக அணியில் இரண்டு ஆல் ரவுண்டர்கள் இருக்கும்போது, மேலும் ஒரு அல் ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டியை அறிமுகப்படுத்தியதுதான் என கூறப்படுகிறது.
நிதிஷ் ரெட்டி அணிக்குள் வந்ததால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வரும் குல்தீப் யாதவை வாய்ப்பு கொடுக்காமல் அமர வைத்ததே தோல்விக்கு காரணம் என கூறுகின்றனர். இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீரை கடுமையாக சாடி உள்ளார்.குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டுவராத வரை இந்திய அணி வெற்றி பெறாது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நிதிஷ் குமார் ரெட்டியுடன் 2 ஸ்பின்னர்கள் ஏதற்காக விளையாடுகிறர்கள் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. பேட்டிங் ஆழத்தை விரும்புவதால், அவர்கள் விளையாடுகிறார்கள். ஆனால் நீங்கள் கொஞ்சம் பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். பெர்த் போன்ற பெரிய மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்காத குல்தீப் வெறு எங்குதான் விளையாடுவார்?
பெர்த் மைதானத்தில் குல்தீப்-க்கு ஏற்றதுபோல், ஓவர்ஸ்பீன், பவுன்ஸ் ஆகியவை இருந்தது. பேட்டிங்கில் ஆழம் வேண்டும் என்றால், அந்த பொறுப்பை பேட்டர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறந்த பந்து வீச்சாளர்கள் வேண்டும்.ஆனால் நீங்கள் பேட்டிங்கை வலுப்படுத்த மட்டுமே நினைக்கிறீர்கள். உங்களுக்கு எத்தனை ஆல் ரவுண்டர்கள் தேவை? தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் குல்தீப் தன்னுடைய திறமை மீதே சந்தேகப்பட தொடங்குவார். அது அவரை மனதளவில் பாதிக்கும் என கூறினார்.
About the Author
R Balaji