லூவ்ரெ அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குள் திருடர்கள் எப்படி ஊடுருவினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. “ஓஷன்ஸ் லெவன்” படத்தில் வருவது போல் நுணுக்கமான திட்டமிடல், டீம் ஓர்க் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விலைமதிப்பற்ற பொருட்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அருங்காட்சியகத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் கொண்டு வந்து நிறுத்திய ஹைட்ராலிக் லிப்ட் […]
