ரேக்ஜாவிக்,
ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson), தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே, மூன்று கொசுக்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ‘குலிசெட்டா அன்யூலேட்டா’ (Culiseta annulata) வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள் இரண்டு பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் கூறியுள்ளார்.
அண்டார்டிகாவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து நீண்ட காலமாக கொசுக்கள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில், அங்கு கொசுக்கள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் கண்டுபிடித்துள்ளார்.
இந்தக் கொசுக்கள் சமீபத்தில் வந்த கப்பல்கள் அல்லது சரக்குப் பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த இனம் பல இடங்களில் பரவியுள்ளதா என்பதை அறிய, வசந்த காலத்தில் (Spring) கண்காணிப்பைத் தொடர வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.