சென்னை: தென்மாவட்டங்களில் நடைபெற்று வரும் ‘ கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி இது திமுக அரசின் விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்துள்ளதுடன், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திஉள்ளார். நெல்லை, தென்காசி, கன்னியா குமரி மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தராவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க முடியாது என […]