சென்னை: நாளை மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மருது பாண்டியர்களின் நினைவு நாளான 24.10.2025 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம், […]
