பூமியின் அருகில் சுற்றி வரும் புதிய நிலா; விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி,

உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அருகே சுற்றி வரும் புதிய ‘குவாசி மூன்’ என்ற நிலா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘அர்ஜுனா 2025 பி என்7’ என பெயரிடப்பட்டுள்ளது.இது உண்மையான நிலவு கிடையாது. இது ஒரு சிறு கோள் ஆகும். ஆனாலும் பூமியை போலவே இதுவும் சூரியனை சுற்றி பாதையும், வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதால் பூமியை விட்டு இது வெகுதூரம் விலகி செல்லாது.பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இது பூமிக்கு மிக அருகில் உள்ள பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

அதாவது இது பூமியின் மீது உண்மையான ஈர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு நிலவு போல, ஒரு துணை பொருள் போல பூமியின் அருகிலேயே இருக்கிறது.எனவே தான் இதனை ‘குவாசி மூன்’ (கிட்டத்தட்ட நிலவு) என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். இந்த குவாசி மூன் சில ஆண்டுகளாக பூமியின் அருகே சுழன்று கொண்டிருக்கிறது.

இது 19 மீட்டர் அதாவது 62 அடி அளவுள்ள சிறுகோள் ஆகும். பல ஆண்டுகளாக இது பூமியின் அருகே இருந்திருந்தாலும், இதுவரை கண்டறியப்படாமல் இருந்துள்ளது. சமீபத்திய உயர்திறன் கொண்ட தொலைநோக்கிகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் மூலம் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது சில ஆண்டுகள் பூமியின் அருகில் கு குவாசி-ஆர்பிட் எனப்படும் பாதையில் தொடர்ந்து சுழலக் கூடும். அதன்பிறகு பாதை மாறி பூமியை விட்டு விலகி செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறும் விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமானதாக அமைந்துள்ளது என்றனர்.

இத்தகைய சிறிய விண் கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவுவதாகவும்,எதிர்காலத்தில் விண்கல் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு இவை உதவக்கூடும் எனவும் தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.