வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டம் திருநெல்லியில் உள்ள அரசு ஆசிரம உயர்நிலைப் பள்ளி கட்டிடம் தகுதியற்றது என பொதுப் பணித் துறை அறிவித்தால் இங்குள்ள மாணவர்களை, கண்ணூர் மாவட்டம் ஆரலத்தில் உள்ள மாதிரி உறைவிடப் பள்ளிக்கு மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மாநில எஸ்சி, எஸ்டி, ஓபிசி நலத்துறை அமைச்சர் ஓ.ஆர்.கேலுவுக்கு வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “அரசின் இந்த முடிவு மாணவர்களை படிப்பை கைவிடச் செய்யும். ஏனெனில் அவர்களை பார்க்க கண்ணூர் வரை பயணிக்க அவர்களின் குடும்பங்களுக்கு வசதியில்லை. தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல மாணவர்களும் விரும்பவில்லை. எனவே இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இடியும் அபாயமுள்ள அரசுப் பள்ளியின் மாணவர்களை வயநாடு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான பள்ளிக்கு மாற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.