கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

ருத்​ரபிர​யாக்: உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் புகழ்​பெற்ற கேதார்​நாத் சிவன் கோயில் அமைந்​துள்​ளது.

சார்​தாம் யாத்​திரை​யின் ஒரு அங்​க​மான இந்த கோயில் ஆண்​டு​தோறும் கோடை காலத்​தின் தொடக்​கத்​தில் திறக்​கப்​பட்டு குளிர்​காலத்​தின் தொடக்​கத்​தில் மூடப்​படும். அந்த வகை​யில், குளிர்​காலம் தொடங்க உள்ளதால் கேதார்​நாத் கோயில் நடை நேற்று அடைக்​கப்​பட்​டது.

முன்​ன​தாக, நேற்று காலை​யில் சிறப்பு பூஜை நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, கோயில் நிர்​வாகக் குழு அதி​காரி​கள், அர்ச்​சகர்​கள் உட்பட நூற்​றுக்கணக்​கானோர் பங்கேற்றனர். கோயில் நடை அடைக்​கப்​பட்​டதையடுத்​து, இனி பகவான் கேதார்​நாத், குளிர்​கால இல்​ல​மான உகிமத்​தில் உள்ள ஓம் காரேஷ்வர் கோயி​லில் அருள் பாலிப்​பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.