டேராடூன்,
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்- பவார் பழங்குடி பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிப்ப வர்கள் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களின் போது அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒருமனதாக ஒரு முடிவு செய்துள்ளனர். அதில் குடும்ப விழாக்களில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருமணமான பெண்கள் 3 குறிப்பிட்ட தங்க நகைகளை மட்டுமே அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
இனிமேல் திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் பெண்கள் மூக்குத்தி, காதணி மற்றும் நெக்லஸ் ஆகிய 3 நகைகளை மட்டுமே அணிய வேண்டும். இந்த கட்டுப்பாட்டை மீறும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,
தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கி தவிக்கின்றனர். மேலும் சேமிப்பும் குறைகிறது. திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு. அது பகட்டான காட்சி மேடை அல்ல. எனவே தான் பணக்காரர் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இடையேயான வெளிப்படையான நுகர்வை குறைப்பது, தேவையற்ற செலவுகளை கட்டுப் படுத்துவது, சமூக ஒற்றுமையை வளர்ப்பது போன்ற நோக் கங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை மீறும் எந்த பெண்ணுக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு சுந்தர்கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கட்டாயமாகும் என்றனர்.