பிஹாரின் காட்டாட்சியை மறக்கவே முடியாது: ஆர்ஜேடி கட்சியின் முந்தைய ஆட்சி பற்றி பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: நூறு ஆண்​டு​கள் ஆனாலும் பிஹாரில் ஆர்ஜேடி கட்சியின் காட்​டாட்​சியை மக்​களால் மறக்​கவே முடி​யாது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பாஜக தொண்​டர்​களு​டன் பிரதமர் மோடி அவ்​வப்​போது காணொலி வாயி​லாக கலந்​துரை​யாடி வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாக, ‘எனது பூத் மிக​வும் வலிமை​யானது’ என்ற தலைப்​பில் பாஜக தொண்​டர்​களு​டன் அவர் நேற்று மாலை காணொலி வாயி​லாக கலந்​துரை​யாடி​னார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது:

பிஹாரில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியின் கடந்த கால காட்​டாட்​சியை நூறு ஆண்​டு​கள் ஆனாலும் மக்​களால் மறக்​கவே முடி​யாது. அப்போது அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி இருந்​தது. மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு மிக​வும் மோச​மான நிலை​யில் இருந்​தது.

தற்​போது பிஹார் மாநில எதிர்க்​கட்​சிகள் தங்​களது கடந்த கால தவறுகளை மறைக்க தீவிர முயற்சி செய்​கின்​றன. ஆனால் அவர்​களின் தவறுகளை மன்​னிக்க மக்​கள் ஒரு​போதும் தயா​ராக இல்​லை. கடந்த காலங்​களில் பிஹாரில் காட்​டாட்சி அமைவதை தடுத்து நிறுத்​தினோம். வரும் தேர்​தலிலும் தடுத்து நிறுத்​து​வோம்.

எதிர்க்​கட்​சிகள் தங்​களை மெகா கூட்​டணி என்று அழைத்துக் கொள்​கின்​றனர். உண்​மையை சொல்​வதென்​றால், அவர்​கள் மெகா ஊழல் கூட்​ட​ணி. வரும் தேர்​தலில் இந்த ஊழல் கூட்​ட​ணியை மக்​கள் புறக்​கணிப்​பார்​கள்.

பிஹாரில் புதிய அத்​தி​யா​யம் எழுதப்​பட்டு வரு​கிறது. இந்த அத்​தி​யா​யத்​தில் இளைஞர்​கள் மிக முக்​கிய பங்கு வகித்து வரு​கின்​றனர். மாநிலத்​தின் வளர்ச்​சிக்கு அவர்​கள் உறு​துணை​யாக உள்​ளனர். தேர்​தல் காலத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யின் நலத்​திட்​டங்​கள் குறித்து பாஜக தொண்​டர்​கள் ஒவ்​வொரு வீடாக சென்று பிரச்​சா​ரம் செய்ய வேண்​டும்.

பாஜக ஆட்​சிக் காலத்​தில் அயோத்​தி​யில் ராமர் கோயில் கட்​டப்​பட்டு உள்​ளது. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டது. நாடு முழு​வதும் இருந்து மாவோ​யிஸ்ட், நக்​சல் தீவிர​வாதம் வேரறுக்​கப்​பட்டு வரு​கிறது.

பிஹாரில் சுமார் 1.2 கோடி பெண்​கள் தொழில் தொடங்க ஏது​வாக அவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் அண்​மை​யில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்​யப்​பட்​டது. பிஹார் இளைஞர்​களின் கனவு​கள் நனவாக பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. குறு, சிறு விவ​சா​யிகளுக்கு நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

எனவே பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இளைஞர்​கள், விவ​சா​யிகள், பெண்​கள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) ஆதர​வாக வாக்​களிப்​பார்​கள். மாநிலத்​தில் என்​டிஏ கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இதன்​மூலம் பெண்​கள் முன்​னேற்​றத்​தில் புதிய யுகம் தொடங்​கும். வரும் நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது என்​டிஏ கூட்​டணி அமோக வெற்​றி பெறும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.