மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார்.

ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிமை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆசி​யான் அமைப்​புக்கு மலேசியா தலை​மையேற்று இருக்​கிறது. இதற்​காக வாழ்த்து தெரி​வித்​தேன். ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் காணொலி வாயி​லாக பங்​கேற்க உள்​ளேன். இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த புதன்​கிழமை இரவு இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி தொலைபேசி​யில் பேசி​னார். மலேசி​யா, இந்​தியா இடையி​லான உறவை வலுப்​படுத்​து​வது குறித்து இரு​வரும் விரி​வாக ஆலோ​சித்​தோம். வர்த்​தகம், முதலீடு, தொழில்​நுட்​பம், கல்​வி, பிராந்​திய பாது​காப்பு ஆகிய துறை​களில் மலேசி​யா, இந்​தியா இணைந்து செயல்​பட்டு வரு​கின்​றன.

தீபாவளி பண்​டிகை காலம் என்​ப​தால் ஆசி​யான் – இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்க உள்​ளார். அவரது முடிவை மதிக்​கிறேன். பிரதமர் மோடிக்​கும் இந்​திய மக்​களுக்​கும் தீபாவளி வாழ்த்​துகள். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

ட்ரம்ப் வரு​கை​.. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆசி​யான் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க உள்​ளார். இதன் காரண​மாகவே பிரதமர் நரேந்​திர மோடி மலேசியா பயணத்தை ரத்து செய்​திருப்ப​தாகக் கூறப்​படு​கிறது. இது குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது:

பிரதமர் நரேந்​திர மோடி ஆசி​யான் உச்சி மாநாடு, ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு​களில் தொடர்ச்​சி​யாக பங்​கேற்று வரு​கிறார். அவரது முயற்​சி​யால் கடந்த 2014-ம் ஆண்​டில் ஆசி​யான் அமைப்​பு, இந்​தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த சூழலில் முதல்​முறை​யாக ஆசி​யான் உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​க​வில்​லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேருக்கு நேர் சந்​திப்​பதை தவிர்க்​கவே அவரது மலேசிய பயணம் ரத்து செய்​யப்​பட்டு இருக்​கிறது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையி​லான போரை நிறுத்​தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ச்​சி​யாக கூறி வரு​கிறார். இதை இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது. தேவையற்ற சர்ச்​சைகளை தவிர்க்க மலேசிய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்​திருக்​கிறார். இவ்​வாறு அரசி
யல்​ நோக்​கர்​கள்​ தெரிவித்துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.