மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசுக்கு வைகோ கோரிக்கை 

சென்னை: மழை, வெள்​ளத்​தால் பாதிக்கப்​பட்​டுள்ள விவ​சா​யிகளுக்கு இழப்​பீட்டு நிதி உதவியை உடனடி​யாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்​தில் பரு​வ​மழை தீவிரம் அடைந்து, முல்​லைப் பெரி​யாற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், ஆற்​றின்கரையோரப் பகு​தி​யிலும், பாசனப் பகு​தி​யில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்​ப​யிர்​கள், காய்​கறிகள் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளன.

சின்ன வாய்க்​கால், உத்​தம​முத்து வாய்க்​கால், கம்​பம், சின்​னமனூர், உத்​தம​பாளை​யம், உப்​புக்​கோட்​டை, பாலார்​பட்டி கூழையனூர் பகு​தி​களில் வாய்க்​கால்​களில் உடைப்பு ஏற்​பட்டு அறு​வடைக்கு தயா​ராக இருந்த நெற் பயிர்​கள் நீரில் மூழ்கி அழுகி இருக்​கின்​றன. எனவே, சேதமடைந்​துள்ள நெற் பயிர் மற்​றும் தோட்​டப் பயிர்​களைக் கணக்​கீடு செய்து தமிழக அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும். சேதம டைந்த வாய்க்​கால் கரைகளை செப்​பனிட வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.