புதுடெல்லி,
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டு களாக போர் நடந்து வரு கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லூகாயில் மீது டிரம்ப் அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளார். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அந்த எண்ணை நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளன.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியவின் அந்த 2 எண்ணை நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கு வகிக்கின்றன. ரஷியாவின் 60 சதவீத எண்ணை தேவையை இந்த 2 நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. ரஷியாவின் ரோஸ்னெப்ட், லூகாயில் நிறுவனங்களிடமிருந்து இந்திய தனியார் துறை எண்ணை நிறுவனமான ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் கச்சா எண்ணை வாங்கி வருகின்றன. அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருப்பதால் ரஷிய நிறுவனங்களிடமிருந்து எண்ணை கொள்முதல் செய்யும் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நேற்று 5.43 சதவீதத் துக்கு மேல் உயர்ந்தது. ரஷியாவிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணை வாங்குகிறது. இந்த வினியோகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதில் ரஷியாவையே அதிகம் சார்ந்துள்ளது. அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணையில் 35 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈராக்கில் இருந்து 20 சதவீத மும், சவுதி அரேபியாவில் இருந்து 15 சதவீதமும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 12 சதவீதமும் கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து வெறும் 5 சதவீதம் அளவுக்குத்தான் இந்தியா கச்சா எண்ணை வாங்குகிறது. இந்த கோபத்தில் தான் ரஷிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை கொண்டு வந்துள்ளது. இது ரஷியா-இந்தியா இரு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதே நேரம், மத்திய அரசுக்கு சொந்தமான சுத்தி கரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.), இந்துஸ்தான் பெட் ரோலியம் (எச்.பி.சி.எல்.), மங்களூர் சுத்திகரிப்பு – பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், எச். பி.சி.எல்.- மிட்டல் எனர்ஜி (எச்.எம்.இ.எல்) நிறுவனங்களும் ரஷியாவின் கச்சா எண் ணையை கொள்முதல் செய்கின்றன. ஆனால், அரசுக்கு சொந்த மான சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவின் ரோஸ்னெப்ட், லூகாயில் நிறுவனங்களுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை.