ஒட்டாவா: கனடா அஞ்சல் துறை கடந்த 2017 முதல் தீபாவளி கருப்பொருள் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது.
இதனை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரித்து கனால் வடிவமைத்தார். இதில் ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘தீபாவளி’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.