புதுடெல்லி: டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது:
கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில் கைது செய்தோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் டெல்லியில்
தீபாவளி பண்டிகை நாளில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.
தெற்கு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு வணிக வளாகம், பூங்கா உள்ளிட்ட இடங்களை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்களின் நெட்வொர்க் மற்றும் சதித் திட்டங்களை முழுமையாக அறிய அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.