சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. பருவமழை என்றலே சென்னை மாநகர மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது வாடிக்கையாகவே உள்ளது. […]