லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் பிரம்மாண்ட ராமர் கோயில், கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான பிராண பிரதிஷ்டை விழா, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் எஞ்சியிருந்த கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், “ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கோயில் உச்சியில் கொடியேற்றும் விழா நவம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொடியேற்றி வைக்கிறார்” என்றார்.