சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்துக்கான பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை கட்சித் தலைமை நியமித்துள்ளது.
இந்நிலையில், பாஜக சார்பில் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய, மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் குழுவில் தமிழக மூத்த நிர்வாகிகளும் இடம் பெற உள்ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்கிறது. இதில் தொகுதி, மாநிலபிரச்சினைகள், மக்களை கவரும் அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.