புதுடெல்லி: ஐ.நா. தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில் இந்திய பிரதிநிதி பர்வதன்னேனி ஹரிஸ் நேற்று முன்தினம் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இங்கு இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் அரசியல்சாசன விதிகளின் படி மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை பின்பற்றுகின்றனர். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் வசிக்கும் மக்கள் மிக கொடூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு ஆளாகின்றனர்.
அவர்கள் ராணுவ ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும், வளங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுவதற்கும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். இங்கு நடைபெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு ஹரிஸ் தெரிவித்தார்.