டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்தநீதிபதி சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.24ல் ஓய்வுபெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனது உச்ச நீதிமன்ற சகாவும், தனக்குப் பிறகு மூத்த நீதிபதியுமான நீதிபதி சூர்யா காந்த்தின் பெயரை இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு தனது வாரிசாகப் பரிந்துரைத்தார். தற்போதைய உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக […]