திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர், செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. கடல் அலைகளால் இத்தலம் எப்போதும் அலைக்கப்படுவதால் ‘அலைவாய்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள முருகன் ‘செந்தில் […]