விலா எலும்பு முறிவு? ஒரு கேட்சால் எல்லாம் போச்சு! ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது?

Shreyas Iyer Rib Fracture: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும், அந்த போட்டியில் இந்திய அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயம் காரணமாக, வரவிருக்கும் முக்கியமான தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

 BREAKING NEWS 

-Shreyas Iyer has attained a rib-cage injury currently at Sydney Hospital. pic.twitter.com/9II3hkCNIp

— Yashraj Sharm@ImYashraj45) October 26, 2025

அசத்தல் கேட்ச்

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி எதிர்கொண்டார். அந்த பந்து தேர்டு மேன் திசை நோக்கி மிக உயரமாக சென்றது. பேக்வர்டு பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், பின்னோக்கி ஓடி சென்று, அந்த மிக கடினமான கேட்ச்சை அற்புதமாக பிடித்தார். ஆனால், கேட்ச் பிடித்த வேகத்தில் அவர் இடது பக்க விலா எலும்பு தரையில் பலமாக இடிக்கும் வகையில் கீழே விழுந்தார். வலியால் துடித்த அவரை, உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் கம்லேஷ் ஜெயின் மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றார். பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

மூன்று வாரங்கள் ஓய்வு?

போட்டியின் போதே, ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ , “பீல்டிங்கின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. கூடுதல் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிசிசிஐ வட்டாரங்கள் PTI செய்தி நிறுவனத்திடம், “ஆரம்பகட்ட பரிசோதனைகளின்படி, ஸ்ரேயாஸ் ஐயரின் விலா எலும்பில் ஒரு ஜெர்க் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது கிரிக்கெட் விளையாட முடியாது. இந்தியா திரும்பியதும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடுவார். முழுமையான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரிய வரும். ஒருவேளை காயம் பெரியதாக இருந்தால் குணமடைய கூடுதல் காலம் ஆகலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்பது சந்தேகம்

இந்த காயம் காரணமாக, நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது மிகவும் சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. முதுகு பிரச்சினை காரணமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுத்துள்ள 30 வயதான ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். டி20 அணியிலும் அவர் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி 61 ரன்கள் குவித்து, பார்முக்கு திரும்பியிருந்தார். இந்த சூழலில், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் காயம் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.