சீஸ் கேக் சாப்பிட்ட கணவர்; 25 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொண்ட மனைவி; என்ன நடந்தது?

திருமண நாள் கொண்டாட்டத்திற்காக வாங்கிய சீஸ் கேக்கை, மனைவிக்குத் தராமல் கணவர் முழுவதுமாகச் சாப்பிட்டதால், 25 ஆண்டு கால திருமண உறவை ஒரு பெண் முறித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஷாடி என்ற 46 வயதான பெண் தனது 25வது திருமண நாளை முன்னிட்டு சீஸ் கேக் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அந்தக் கேக்கை அவருக்கு ஒரு துண்டு கூட வைக்காமல், அவரது கணவர் முழுவதுமாகச் சாப்பிட்டுள்ளார்.

ஷாடி கடந்த 25 வருட திருமண வாழ்வில், தன் கணவர் தன்னிடம் அன்பாகவோ, அக்கறையாகவோ இல்லை என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளார். இந்த நீண்ட காலப் புறக்கணிப்புகளால் ஏற்பட்ட மன வருத்தம், திருமண நாளன்று வாங்கிய கேக்கைக்கூடத் தனக்குத் தராமல் கணவர் சாப்பிட்டபோது, ஒரு பெரிய ஏமாற்றமாக வெடித்திருக்கிறது.

cake
cake

இதுகுறித்து மனமுடைந்த ஷாடி, பிரபல சமூக வலைதளமான ரெட்டிட்டில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, “எனது 25 வருட திருமண பந்தத்தில் நான் அவருக்காகப் பலவற்றைச் செய்துள்ளேன். ஆனால், அவர் எனக்காக ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. அவருக்கு எந்த விதமான நன்றியுணர்வும் இல்லை.

திருமண நாளுக்காக வாங்கிய கேக்கை எனக்காக எடுத்து வைக்காதது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இது என் பொறுமையின் கடைசி எல்லை. அதனால் விவாகரத்து செய்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.