சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர், அதே பைக்கில் வீடு திரும்பி வந்தபோது, பைக்கை ஓட்டிய இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கிறார். அதைக் கவனித்த வடமாநில இளம்பெண், எங்கே செல்கிறீர்கள் என்று பைக்கை ஒட்டியவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி

ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பைக்கை ஒட்டியவர், இருட்டான பகுதியில் பைக்கை நிறுத்தியிருக்கிறார். பின்னர் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறார்.

என்னவென்று தெரியாமல் திகைத்த அந்த இளம்பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார் பைக்கை ஓட்டிய இளைஞர். அதனால் சத்தம் போட முடியாமலும் அந்த இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமலும் இளம்பெண் தவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அந்த இளம்பெண்ணை மிரட்டிய இளைஞர் அவருக்கு சொல்ல முடியாத பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த இளைஞருடன் போராடியிருக்கிறார்.

அதன்பிறகு இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் தனக்கு நடந்த கொடுமைகளை தன்னுடைய கணவருக்கு செல்போன் மூலம் இளம்பெண் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்
பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்

அதன்பிறகு கணவரின் உதவியோடு வீட்டுக்கு வந்த இளம்பெண், வாகனகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பைக்கை ஓட்டிய இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இளைஞர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது. இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் சிவகுமார் (22) என்றும் தேனிமாவட்டம், ஓடைப்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு சிவகுமாரை கைது செய்த போலீஸார், அவரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.