டோக்கியோ,
5 நாள்கள் ஆசிய பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று மலேசியா வந்திருந்தார். அங்கு நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கம்போடியா-தாய்லாந்து இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து இன்று ஜப்பானுக்கு டிரம்ப் சென்றார். தலைநகர் டோக்கியோ விமான நிலையத்திற்கு வருகை தந்த டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமரும், ஷின்சோ அபேவின் அரசியல் வாரிசான சனே தகேச்சியை சந்தித்து டிரம்ப் நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அமெரிக்கா மீதான ஜப்பானின் ரூ.46.2 லட்சம் கோடி (550 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்கு பதிலாக அமெரிக்கா சோயபீன் மற்றும் போர்டு நிறுவனத்தின் அதிநவீன எப்-150 ரக கார்களை மானிய விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்படவுள்ளது.
முன்னதாக ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை டோக்கியாவில் உள்ள அரண்மனைக்கு சென்று டிரம்ப் சந்தித்தார். அப்போது அவருக்கு சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது.