துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான்-தலிபான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இருநாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் ஆப்கானின் தாலிபான் அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் முயற்சியால் நடைபெற்ற இந்த பேச்சு தோல்வி அடைந்ததால் சமரசத்தில் ஈடுபட்ட இவ்விரு நாடுகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.