Ramya Krishnan: “புகழ் அவரைத் துளிகூட மாற்றவில்லை!" – நினைவுகள் பகிரும் ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தற்போது `ஜெயிலர் 2′ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களை ஒன்றாக இணைந்து `பாகுபலி எபிக்’ என்ற டைட்டிலில் முழு நீள திரைப்படமாக இந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.

Ramya Krishnan
Ramya Krishnan

சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான நேர்காணலில் ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கை குறித்த பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்த அவர் மறைந்த நடிகை சௌந்தர்யா பற்றியும் அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

`படையப்பா’ படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சியைப் பார்த்து கண்கலங்கிய ரம்யா கிருஷ்ணன், “நான் ‘படையப்பா’ உட்பட அவருடன் பல படங்களில் வேலை செய்திருக்கிறேன்.

அவர் மிகவும் இன்னொசென்ட். அழகான குழந்தை போன்றவர் அவர்.

நடிகை சௌந்தர்யா
நடிகை சௌந்தர்யா

அவராகவே சினிமாவில் வளர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். புகழ் அவரை ஒரு துளிகூட மாற்றவில்லை.

சௌந்தர்யாவைப் போன்ற அழகான மனிதரை நான் முதன் முதலில் `அமரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் சந்தித்தேன்.

அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட.” என்றபடி முடித்துக் கொண்டார்.

ரம்யா கிருஷ்ணனும், சௌந்தர்யாவும் `படையப்பா’ , `அமரு’, `ஹலோ ப்ரதர்’ என்ற மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.