சென்னை: சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம் நடை பெறுகிறது, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர கால உதவிக்கு 1913 எண்ணை அழைக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர். […]