ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் – நாகாலாந்து ஆட்டம் ‘டிரா

பெங்களூரு,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூவில் நடைபெற்று வரும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதம் அடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்களுடனும், இந்திரஜித் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகாலாந்து அணி நேற்றைய 3ம் நாள் முடிவில் 127 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 365 ரன்கள் குவித்திருந்தது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 161 ரன்னுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டும், சந்திரசேகர் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில்,147 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை நாகாலாந்து இன்று தொடங்கியது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நாகாலாந்து தனது முதல் இன்னிங்சில் 446 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 175 ரன்கள் எடுத்தார்.

தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 4 விக்கெட்டும், சந்திர சேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்சில் 66 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து தமிழக அணி தனது 2வது இன்னிங்சை ஆட தொடங்கும் முன்னர் வானிலை காரணமாக ஆட்டம் சிறிது தடைப்பட்டது. தொடர்ந்து நிலைமை சீராகாததால் ஆட்டம் அத்துடன் டிராவில் முடிக்கப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.