ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்; 1-ந்தேதி ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.