IPL Mini Auction 2026: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டன் சஞ்சு சாம்சன் குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு காரனம இருக்கிறது. அதாவது சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேறி அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (Chennai Super Kings) அணியில் இணையக்கூடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு சஞ்சு சாம்சனின் எதிர்காலம் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அவரது உறவு பற்றிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த செய்தி உண்மையா?, சஞ்சு சாம்சன் குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் என்ன கூறியது?, சஞ்சு சாம்சனின் ஐபிஎல் புள்ளிவிவரங்கள் போன்றவற்றை பற்றி பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு புதிய கேப்டன்?
தோனிக்குப் பிறகு கேப்டன் பதவியை ஏற்க ஒரு இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை சிஎஸ்கே தேடி வருவதாகவும், அதற்கு சஞ்சு சாம்சன்சரியான பொருத்தமாக இருப்பார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அளித்த விளக்கம் என்ன?
ஊடக அறிக்கைகளின்படி, எந்த புதிய வீரரின் ஒப்பந்தம் அல்லது மாற்றம் குறித்தும் இதுவரை எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் சஞ்சு சிஎஸ்கே அணிக்கு மாறுவது இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்:
சஞ்சுவுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இடையே உள்ள உறவு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது.இவர் 2013 முதல் ஆர்ஆர் அணியுடன் இணைந்து, 149 போட்டிகளில் 4,200 ரன்கள் எடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சஞ்சு, அணிக்கு முக்கிய தலைமைத்துவத்தையும் வழங்கி வருகிறார்.
சஞ்சு சாம்சன் விருப்பம் என்ன?
ஆனால், 2025 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, சஞ்சு அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது ஒப்பந்தம் 2027 வரை நீடிக்கும் என்பதால், அவரின் விருப்பம் அணியின் உரிமையாளர் மனோஜ் படேலின் முடிவிற்கு உட்பட்டது. அணியின் தற்போதைய சூழ்நிலை மற்றும் சஞ்சுவின் தொழில் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சஞ்சு சாம்சனுக்கும் என்ன பிரச்சனை?
மறுபுறம் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது வேறு அணிக்கு மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெளிவாக உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்.
இணைப்பு: சஞ்சு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கிடையே 12 ஆண்டுகளுக்கும் மேலான உறவு.
ஐபிஎல் மினி ஏலம்: புதிய வீரர் மாற்றங்கள் மற்றும் விற்பனை குறித்து சிஎஸ்கே நிர்வாகம் எந்தவித விவாதமும் நடைபெறவில்லை என்று அறிவித்துள்ளது.
சிஎஸ்கே சேரும் வாய்ப்பு: சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டுள்ளன.
கேப்டன் பதவி: 2021 இல் ஸ்டீவ் ஸ்மித்தை விட்டுட்டு சஞ்சு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விருப்பம்: 2025 ஐபிஎல் முடிவுக்கு பிறகு அணியை விட்டு வெளியேற சஞ்சு விருப்பம் தெரிவித்தார்.
ஒப்பந்த காலம்: 2027 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஒப்பந்தம் உள்ளது.
முடிவு: மனோஜ் படேலின் தலைமையில் நடைபெறும்.
சஞ்சு சாம்சன் காலவரிசை அட்டவணை:
2013: கொல்கத்தா நைட் ரைடர்ஸால் விடுவிக்கப்பட்ட பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்ப்பு
2021: சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிப்பு
2024 (ஐபிஎல் மினி ஏலம் முன்): சிஎஸ்கே அணியில் சேரும் வாய்ப்புகள் பரபரப்பாக பேசப்பட்டது, ஆனால் நிர்வாகம் மறுத்தது
2025 (ஐபிஎல் சீசன் முடிவு): ஆர்ஆர் அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்தார்
2027: சஞ்சுவின் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தத்தின் காலாவதி
சஞ்சு சாம்சனின் ஐபிஎல் புள்ளிவிவரங்கள் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணி)
– போட்டிகள்: 149
– ரன்கள்: 4,200+
– அரைசதங்கள்: 26
– சதங்கள்: 2
– கேப்டன் பதவி: 2021 முதல் தற்போது வரை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More