2026 ஐபிஎல் தொடரின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், சில முக்கிய வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும் டிசம்பர் மாதம் 13, 15ஆம் தேதி ஐபிஎல் தொரின் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வெளியிட இருக்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
ரோகித் சர்மா கேகேஆர் அணியில் இணைகிறாரா?
இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியுடன் இணைந்த இதே நாளில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அந்த அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், ரோகித் சர்மா கேகேஆர் அணியில் சேர மாட்டார் என்பதை மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தள வாயிலாக உறுதிபடுத்தி உள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
“நாளை சூரியன் மீண்டும் உதிக்கும், அது நிச்சயம், ஆனால் ‘நைட்’ உடன்… இது கடினம் மட்டுமல்ல, சாத்தியமற்றது!” என மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே நீடிப்பார் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரோகித் சர்மா சொல்கிறார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராகவே விளையாடினார். இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மாவை கேகேஆர் அணி அவரை அணுகியிருக்கலாம் என இதுபோன்ற வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், மும்பை அணி அவரை விடுவிக்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ விரும்பவில்லை என்பதை அவர்களது பதிவு மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.
உச்சக்கட்ட ஃபார்மில் ரோகித் சர்மா
ஹிட்மேன் ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல்லில் 272 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 29.73 சராசரியுடன் 7046 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132.10 ஆகும். மேலும், இரண்டு சதங்களையும் 47 அரை சதங்களையும் அடித்துள்ளார். 302 சிக்ஸர்களை அடித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அவர் சிறந்த ஃபார்மில் இருந்ததை நிருபித்தார். மூன்று போட்டிகளில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அசத்தினார். அத்தொடரின் நாயகன் விருதை அவரே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji