தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!

சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்​கள் ‘தேசிய அறி​வியல் விருது’க்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஆண்​டு​தோறும் மத்​திய அரசு தேசிய அறி​வியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

எலெக்ட்​ரிக்​கல் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியர் மோக​னசங்​கர் சிவபிர​காசம், வேதி​யியல் துறை பேராசிரியர் தலப்​பில் பிரதீப் விஞ்​ஞான் ஸ்ரீ விருதும், கம்ப்​யூட்​டர் சயின்ஸ் மற்​றும் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகியோர் விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர் விருதும் வழங்கப்படுகிறது.

ஐஐடி இயக்​குநர்  காமகோடி
ஐஐடி இயக்​குநர் காமகோடி

இதுகுறித்து பேசியிருக்கும் சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி, “அறி​வியல், தொழில்​நுட்​பம் துறை​களில் சிறப்​பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்​கப்​படும் உயரிய விரு​தான தேசிய அறி​வியல் விருதுக்கு எங்​களது 3 பேராசிரியர்​கள் தேர்​வு செய்யப்​பட்​டிருப்​பது பெரு​மை​யாக​ இருக்​கிறது.

அவர்​களின் சாதனை​யானது நாட்​டின் அறி​வியல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் சென்னை ஐஐடி​யின் பங்களிப்பை மீண்​டும்​ உறு​திப்​படுத்​தியிருக்கிறது” என்​று பேசியிருக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.