பிஹாரில் 50 அதிருப்தி வேட்பாளர் போட்டி: இரு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு சவால்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்​பாள​ராகி உள்​ளனர். இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் (ஜேடி​யு) 16 பேரும் பாஜக​வின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்​கின்​றனர்.

இதனால் கட்​சியை விட்டு நீக்​கப்​பட்ட இவர்​கள் சுயேச்​சை​யாகவோ அல்​லது சிறிய கட்​சிகள் சார்​பிலோ போட்​டி​யிடு​கின்​றனர். இவர்​களுக்கு உள்​ளுர்​களில் குறிப்​பிட்ட வாக்கு வங்கி இருப்​ப​தால் சம்​பந்​தப்​பட்ட கட்​சிகளுக்கு இழப்பு ஏற்​படும் வாய்ப்​புள்​ளது. இவர்​கள் பெறும் சில ஆயிரம் வாக்​கு​களும் இரு கூட்​ட​ணிக்​கும் பெரும் இழப்பை ஏற்​படுத்​தும். ஒரு கூட்​ட​ணி​யின் இழப்​பு, மற்​றொரு கூட்​ட​ணிக்கு பலனைத் தந்து விடும்.

கடந்த 2020 சட்​டப்​பேரவை தேர்​தலில் சில நூறு அல்​லது ஆயிரம் வாக்​கு​களில் மெகா கூட்​டணி வேட்​பாளர்​கள் தோல்வி அடைந்​துள்​ளனர். இதனால் ஆட்சி அமைக்​கும் வாய்ப்பை மெகா கூட்​டணி இழந்​தது. கடந்த தேர்​தலில் ஆர்​ஜேடி 23.5%, பாஜக 19.8%, ஜேடியு 15.7%, எல்​ஜேபி 5.8% வாக்​கு​கள் பெற்​றன. என்​டிஏவை விட மெகா கூட்​டணி 19 தொகு​தி​கள் மட்​டுமே குறை​வாக பெற்​றது.

பிஹார் அரசி​யலில் தெளி​வாக கணிக்க முடி​யாத நிலையே இருந்து வரு​கிறது. இம்​முறை அதிருப்தி வேட்​பாளர்​களால் இது மேலும் அதி​கரித்துவிட்டது. சுயேச்சை மற்​றும் சிறிய கட்​சிகளின் வேட்​பாளர்​களும் தேர்​தலில் வெற்றி பெறு​வதுண்​டு. 2020-ல் இவர்​கள் 31 தொகு​தி​களில் வென்​றனர். இது​போன்ற காரணங்​களால் பிஹார் முடிவு​கள் ஒரு திருப்​பத்தை ஏற்​படுத்த​ வாய்ப்​பு​ உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.