யஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘டாக்ஸிக்’ படக்குழு அறிவித்தபடியே 2026 மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. ‘கே.ஜி.எஃப்’ படத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பிற்குப் பிறகு யஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நீண்ட நாள்களாக படம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாததால் சமூக வலைதளங்களில் சமீப நாள்களாக படத்தின் வெளியீடு தாமதமாகும் என வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘KVN Productions’ தயாரிப்பு நிறுவனம், இன்னும் 140 நாள்களில், அறிவித்தபடியே 2026 மார்ச் 19ம் தேதி யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
140 days to go…
His Untamed Presence,
Is Your Existential Crisis.#ToxicTheMovie releasing worldwide on 19-03-2026 https://t.co/9RC1D6xLyn— KVN Productions (@KvnProductions) October 30, 2025
இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
