'என் உயிரின் மெல்லிசையே' – காதலியைக் கரம்பிடித்த `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” எனக் கேட்டிருந்தார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அபிஷன் சொன்னதுபோலவே, இன்று அவர் (அக்டோபர் 31) காதலி அகிலாவை கரம்பிடித்திருக்கிறார்.

இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ் ஆகியோர் அபிஷன் ஜீவிந்த் – அகிலாவை வாழ்த்தி இருக்கின்றனர்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

மேலும் இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தி இருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.