ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷுடோஷ் கோஸ்வாமி. இவருக்கும் மணிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அஷுடோஷ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் அவரை அவதூறாக பேசி மனதளவில் காயப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மணிஷா, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், திருமணமாகி 10 நாட்கள் கூட சந்தோஷமாக இருக்கவில்லை என்று மணிஷா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்கொலைக்கு முன்பு மணிஷா பதிவு செய்துள்ள வீடியோவில், அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
