நவம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள வெனியூ மாடலுடன் கூடுதலாக வெனியூ என்-லைனில் N6, N10 என இரு வேரியண்டுகளுடன் ஹூண்டாயின் N-line மாடல்களை போல பல்வேறு டிசைன் வித்தியாசங்களுடன், சிறப்பான செயல்திறன் மற்றும் சஸ்பென்ஷன் சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருக்கும்.
Hyundai Venue N-line
120hp பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று அடிப்படையில் வெனியூ மாடலில் இருந்து வேறுபடுத்தப்பட்ட முன்பக்க கிரில் அமைப்புடன் N-line பேட்ஜிங் பெற்றதாகவும், சிறிய ஸ்கிட் பிளேட் மற்றும் சிவப்பு நிற உச்சரிப்புடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் தவிர சிவப்பு நிறத்திலான கோடுகள் பக்கவாட்டிலும் இடம்பெற்றுள்ள. இதன் ஃபெண்டர்களில் N லைன் பேட்ஜிங் மற்றும் புதிய 17-இன்ச் அலாய் வீல்களுடன் சக்கரங்களுக்கு மேலே உள்ள பாடி கிளாடிங் கொடுக்கப்படவில்லை.
பின்புறத்தில் இரட்டை புகைப்போக்கியுடன் மிக நேர்த்தியாக சிறிய அளவிலான மாறுதல்களை பெற்ற பம்பருடன், எல்இடி டெயில் லைட் அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வென்யூ N லைனின் வண்ணங்களில் அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே, டிராகன் ரெட், அபிஸ் பிளாக் மற்றும் ஹேசல் ப்ளூ ஆகியவற்றுடன் இரட்டை கலவை நிறங்களாக அட்லஸ் ஒயிட், ஹேசல் ப்ளூ மற்றும் டிராகன் ரெட் ஆகியவற்றில் கருப்பு நிற மேற்கூறை உள்ளது.


இன்டீரியரில் முழுமையாக கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில இடங்களில் சிவப்பு நிறங்கள் இடம்பெற்று, என்-லைன் மாடலுக்கான பிரத்தியேக வசதிகளை பெற்றிருக்கின்றது.
வழக்கமான வெனியூ காரை விட பிரீமியம் வசதிகளை கொண்ட என்-லைனில் அகலமான இரட்டை திரை பெற்ற 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, OTA அப்டேட், லெவல் 2 ADAS, காற்றோட்டமான முன் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (DCT மட்டும்), 4-வே பவர்டு டிரைவர் இருக்கை மற்றும் 360-டிகிரி கேமரா போன்றவை இடம்பெற்றிருக்கும்.
தற்பொழுது வெனியூ என்-லைனுக்கு முன்பதிவு கட்டமாக ரூ.25,000 வசூலிக்கப்படும் நிலையில் விலை நவம்பர் 4, 2025ல் அறிவிக்கப்பட உள்ளது.
 
		



